INDvsNZ Semifinal : நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்கு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார்.
ஷுப்மன் கில் அபாரமாக ஆடி வந்த நிலையில், 79 ரன்கள் எடுத்த நிலையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Virat Kohli, Shreyas Iyer hits century
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் சதம்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, இதில் சதமடித்து 117 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை பதிவு செய்து அதிக சதமடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார்.
தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயரும் 105 ரன்கள் குவித்து தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தை பதிவு செய்த நிலையில், ரிட்டயர்டு ஹர்ட் ஆகி வெளியேறிய ஷுப்மன் கில் மீண்டும் வந்தார்.
எனினும் அவர் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டிம் சவுத்தி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார்.