
INDvsAUS Final : உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ள இந்தியன் ரயில்வே
செய்தி முன்னோட்டம்
அகமதாபாத்தில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டிக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு ரயில் சேவைகளை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியன் ரயில்வே அறிவித்துள்ள இந்த சிறப்பு ரயில்கள் டெல்லி மற்றும் மும்பையில் இருந்து அகமதாபாத் வரை இயக்கப்படும்.
இந்த ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு மறுநாள் காலை அகமதாபாத் சென்றடையும். டெல்லியில் இருந்து ஒரு ரயில் மும்பைக்கும், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு மூன்று ரயில்களும் இயக்கப்படும்.
அனைத்து வழக்கமான ரயில் முன்பதிவுகளும் நிரப்பப்பட்டுவிட்டதால், சிறப்பு ரயில்களில் இருக்கைகள் விமான கட்டணத்தை விட மிகவும் மலிவான விலையில் கிடைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
Special Trains announced for INDvsAUS Final
ரயில் கட்டணம் எவ்வளவு?
இந்திய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டியில் விளையாடுவதால் அதிக ரசிகர்கள் போட்டியை நேரில் காண வர உள்ளதால், இந்த ஏற்பாடை செய்துள்ள ரயில்வே நிர்வாகம், சிறப்பு ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டை ரூ.620க்கு விற்பனை செய்கிறது.
மேலும், 3ஏசி எகானமி பெர்த் ரூ.1,525க்கும், வழக்கமான 3ஏசி இருக்கை ரூ.1,665க்கும், முதல் வகுப்பு ஏசி இருக்கை ரூ.3,490க்கும் பெறலாம்.
போட்டியின் முடிவிற்குப் பிறகு, அகமதாபாத்தில் இருந்து மீண்டும் சுமார் 2.30 மும்பை நோக்கி சிறப்பு ரயில்கள் கிளம்ப உள்ளன.
இதனால் ரசிகர்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியை அனுபவித்துவிட்டு திரும்பிச் செல்ல முடியும்.
இந்த சிறப்பு ரயில் சேவைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் செய்யலாம்.