Page Loader
IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு 
இந்தியா அணி பேட்டிங் தேர்வு

IND vs AUS பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி: டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 22, 2024
08:10 am

செய்தி முன்னோட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, பெர்த்தில் நடைபெறும் 'பார்டர்-கவாஸ்கர்' டிராஃபி டெஸ்ட் தொடர் முதல் போட்டியில், டாஸில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. இரண்டு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று, பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரண்டு தொடரில் கோப்பையை வென்றது. இம்முறை மீண்டும் வெற்றிபெரின் அது 'ஹாட்ரிக்' வெற்றியாக இருக்கலாம். இந்திய அணியை பொறுத்த வரை, டெஸ்ட் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. இவருக்குப் பதிலாக பும்ரா கேப்டனாக களமிறங்கியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post