INDvsAUS 2வது டி20 : வானிலை அறிக்கை மற்றும் எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது 2வது டி20 போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) விளையாட உள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆட்டம் மழையால் தடைபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 போட்டிக்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் மழை பெய்து வந்தாலும், வானிலை அறிக்கையின்படி, போட்டி நேரத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
மேலும், ரசிகர்கள் முழு ஆட்டத்தையும் கண்டுகளிக்க முடியும். அக்யூவெதரின் தரவுகளின்படி, பிற்பகலில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாலை நேரத்தில் வானம் ஒப்பீட்டளவில் தெளிவாக இருக்கும்.
INDvsAUS 2nd T20I Expected playing xi
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்தியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்தி வெற்றியின் வேகத்தை தொடரும் என நம்புகிறது. மேலும், விளையாடும் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை.
மறுபுறம் ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட், ஆடம் ஜம்பா மீண்டும் விளையாடும் லெவனில் இடப்பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியா : டிராவிஸ் ஹெட்/மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஆரோன் ஹார்டி, மேத்யூ வேட், சீன் அபோட், நாதன் எலிஸ்ம் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆடம் ஜம்பா/தன்வீர் சங்கா.
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.