Page Loader
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் லக்‌ஷயா சென்
லக்‌ஷயா சென்

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் லக்‌ஷயா சென்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 05, 2024
08:01 pm

செய்தி முன்னோட்டம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார். 22 வயதான அவர் மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் 21-13, 16-21, 11-21 என தோல்வியைத் தழுவினார். முன்னதாக, லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம், ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்திருந்தார். ஆனால், அரையிறுதியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சனிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, லக்‌ஷயா சென் வெளியேற்றம் மூலம் பேட்மிண்டனில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. 2008க்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா பேட்மிண்டன் பதக்கம் வெல்லாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

லக்‌ஷயா சென் தோல்வி