
தென்னிந்திய முறைப்படி திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா, ரச்சனாவை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, செவ்வாயன்று (ஜூன் 6) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் திருமணம் வியாழக்கிழமை நடந்தது.
கிரிக்கெட் வீரர்களான ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
ரச்சனாவைப் பற்றி அதிகம் தெரியவில்லை என்றாலும், அவர் டெல் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக அமெரிக்காவின் டெக்சாஸில் பணியாற்றி வருகிறார்.
மேலும் மாணவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள உதவும் எட் டெக் நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக பிரசித் கிருஷ்ணா, காயம் காரணமாக ஐபிஎல் 2023 சீசனைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Congratulations Prasidh Krishna for his 2nd innings ❤️
— Sportskeeda (@Sportskeeda) June 8, 2023
📷 : Devdutt Padikkal#Cricket #PrasidhKrishna pic.twitter.com/dh0cwdHApm