LOADING...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு எஞ்சியுள்ள வாய்ப்புகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் வாய்ப்பிருக்கிறதா? இந்தியாவின் நிலை இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2025
11:47 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலான ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் 48.15 புள்ளிகள் சதவீதத்துடன் (PCT) இந்தியா ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஜூன் 2027 இல் லார்ட்ஸில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற, மீதமுள்ள ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது ஏழிலாவது இந்தியா கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எஞ்சியுள்ள போட்டிகள்

மீதமுள்ள போட்டிகள் மற்றும் இலக்குகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்னும் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அவற்றில் ஆகஸ்ட் 2026 இல் இலங்கையில் இரண்டு போட்டிகள், அக்டோபர்-நவம்பர் 2026இல் நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் மற்றும் ஜனவரி-பிப்ரவரி 2027 இல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் அடங்கும். முந்தைய WTC சுழற்சிகளைப் பார்க்கும்போது, பொதுவாக 60% க்கு மேல் PCT வைத்திருக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. இந்த வரம்பை அடைய, இந்தியாவுக்கு மீதமுள்ள ஒன்பது போட்டிகளில் குறைந்தது ஏழு வெற்றிகள் தேவை. ஏழு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகள் என்றால், இந்தியாவின் PCT 62.96% ஐ எட்டும். ஆனால், மூன்று தோல்விகள் அடைந்தால் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் கனவு கலைந்து போகும் வாய்ப்புள்ளது.