செப்டம்பர் 27 முதல் INDvsWI தொடர்! கவனிக்க வேண்டிய 5 முக்கிய வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 27 முதல் மோதவுள்ளது. முதலாவது போட்டி திருவனந்தபுரத்திலும், இரண்டாவது போட்டி செப்டம்பர் 30-இல் கவுகாத்தியிலும், இறுதிப் போட்டி அக்டோபர் 3-இல் சண்டிகரிலும் நடைபெறுகின்றன. முதன்மை வீரர்கள் சிலர் ஓய்வில் உள்ள போதிலும் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் சில ஆபத்தான வீரர்கள் உள்ளதால் இத்தொடரில் கவனிக்க வேண்டிய 5 வீரர்களைப் பற்றி பார்ப்போம்.
ரோஹித் ஷர்மா - விராட் கோலி
தொடக்க ஆட்டக்காரராக முத்திரை பதிக்கும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான முந்தைய ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய ரோஹித் ஷர்மா, தொடக்க ஆட்டக்காரராக 32 சதங்களுடன் 9,865 ரன்களைக் குவித்து 54.5 சராசரியை வைத்துள்ளார்.
மற்றொருபுறம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 2,261 ரன்கள் குவித்து 66.50 சராசரியுடன் திகழும் விராட் கோலி, அந்நாட்டிற்கு எதிராக 9 ஒருநாள் சதங்களை விளாசியுள்ளார்.
இவ்விரு அனுபவ வீரார்களின் பேட்டிங் இத்தொடரின் வெற்றிக்கு மிக முக்கியத் தூணாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சு
சுழற்பந்தில் மிரட்டக் காத்திருக்கும் குல்தீப் யாதவ் மற்றும் ஷாய் ஹோப்
சமீபத்தில் கவுண்டி போட்டிகளில் யார்க்ஷயர் அணிக்காக விளையாடி 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களுக்கு இந்திய ஆடுகளங்களில் பெரும் சவாலாக இருப்பார்.
மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் ஒருநாள் போட்டிகளில் 50.09 சராசரியைக் கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த பேட்டராவார்.
குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் 741 ரன்களை 74.10 சராசரியில் விளாசியுள்ளதால், இந்திய பந்துவீச்சாளர்கள் இவரை விரைவில் வீழ்த்துவதில் கவனம் செலுத்துவார்கள்.
சுழல் புயல் குடகேஷ் மோட்டி
நடு ஓவர்களில் திருப்புமுனை ஏற்படுத்தும் சுழல் புயல் குடகேஷ் மோட்டி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ள குடகேஷ் மோட்டி, நடு ஓவர்களில் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதுடன் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறன் கொண்டவர்.
இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் 4.20 என்ற மிகச் சிறந்த எகனாமியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆசிய ஆடுகளங்களில் குறைந்த அனுபவமே இருப்பினும், இவரது வித்தியாசமான சுழற்பந்து வீச்சு இந்திய பேட்டர்களுக்குப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.