Page Loader
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2024
01:36 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புதன்கிழமை (ஜனவரி 3) தொடங்க உள்ளது. முன்னதாக, மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 1-1 என சமன் செய்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. எனினும், அதன் பின்னர் தொடங்கிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், கேப் டவுனில் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

India vs South Africa Test head to head stats

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 43 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் இரு அணிகளும் 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 13 போட்டிகளிலும், இந்தியா 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன. இரு அணிகளும் விளையாடிய கடைசி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

India vs South Africa 2nd test possible playing xi

இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆவேஷ் கான், முகமது சிராஜ், முகேஷ் குமார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பார்க்கப்படும் விளையாடும் XI) : டீன் எல்கர் (சி), ஐடென் மார்க்ரம், டோனி டி சோர்ஸி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்காம், கைல் வெர்ரின்னே (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, நன்ட்ரே பர்கர்.

India vs South Africa 2nd test pitch and weather report

இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை

வானிலை அறிக்கையின்படி, ஜனவரி 3 முதல் ஜனவரி 5 வரை மழை பெய்ய வாய்ப்பில்லை. இருப்பினும், ஜனவரி 6இல், 40 முதல் 50 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், டெஸ்டின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளான ஜனவரி 7இல், 5 முதல் 10 சதவீதம் வரை மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிட்சை பொறுத்தவரை, செஞ்சூரியன் ஆடுகளத்தைப் போலவே, கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியை வழங்கும். ஆனால் கடைசி இரண்டு நாட்களில் நடக்கும் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாத்தியமான ஆதரவும் உள்ளது.

India vs South Africa 2nd Test live streaming where to watch

இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி விபரங்கள்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (ஜனவரி 3) முதல் ஜனவரி 7 வரை நடைபெற உள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 10.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு போட்டி தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைகாட்சி சேனல்களிலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நேரலையில் கண்டு களிக்கலாம்.