Page Loader
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

எழுதியவர் Sindhuja SM
Jan 28, 2024
06:10 pm

செய்தி முன்னோட்டம்

ஐதராபாத்தில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து முதல் வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பென் ஸ்டோக்ஸின் 70(88) ரன்களை எடுத்திருந்தார். இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஒல்லி போப் 196 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நான்கு விக்கெட்டுகளைதட்டி சென்றார். இந்திய தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், முதல் டெஸ்டில் இங்கிலாந்து இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சொந்த மண்ணில் தோற்ற இந்தியா