Page Loader
இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியால் களைகட்டும் இந்தியா: வைரலாகும் வீடியோக்கள்
ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியால் களைகட்டும் இந்தியா: வைரலாகும் வீடியோக்கள்

எழுதியவர் Sindhuja SM
Nov 19, 2023
01:43 pm

செய்தி முன்னோட்டம்

இன்று(நவ.19) அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, தனது நான்காவது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் வெற்றி பெரும் அணிக்கு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியன் பட்டமும் கோப்பையும் வழங்கப்படும். இதனால், இந்திய ரசிகர்கள் ஆரவாரத்துடன் இந்த இறுதி போட்டியை பார்க்க தயாராகி வருகின்றனர். ஏற்கனவே நடந்த தொடர் ஆட்டங்களில் இந்தியா சிறப்பாக விளையாடி பல சாதனைகளை படைத்ததால், இந்த இறுதி போட்டியில் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு கட் அவுட்டுகளை வைத்தும் பாலபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். மேலும், ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.

ட்விட்டர் அஞ்சல்

புனேவில் ரோகித் சர்மா, விராட் கோலி கட் அவுட்-க்கு பாலபிஷேகம்

ட்விட்டர் அஞ்சல்

நரேந்திர மோடி அரங்கத்திற்கு வெளியே களைகட்டும் கூட்டம் 

ட்விட்டர் அஞ்சல்

அகமதாபாத் மைதானத்திற்கு வந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள்

ட்விட்டர் அஞ்சல்

மேற்குவங்கத்தில் விராட் கோலிக்கு மெழுகுச் சிலை

ட்விட்டர் அஞ்சல்

இறுதிப் போட்டியை திரையிட சென்னை மெரினா கடற்கரையில் ஏற்பாடுகள் தீவிரம்