
ஆறு போட்டிகள் கொண்ட ஒயிட் பால் தொடருக்காக வங்கதேசம் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மற்றும் ஜூலையில் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒயிட் பால் தொடரில் விளையாட அந்நாட்டிற்கு செல்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அட்டவணையை உறுதிப்படுத்தியுள்ளது. இதில், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் அடங்கும்.
ஆகஸ்ட 17 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் தொடருடன் வங்கதேச சுற்றுப்பயணம் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20 மற்றும் 23 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.
டி20 போட்டிகள்
டி20 போட்டி அட்டவணை
இந்தியா vs வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இருதரப்பு தொடரின் ஒரு பகுதியாக இந்தியா வங்கதேசத்தில் டி20 கிரிக்கெட் போட்டியை விளையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மிர்பூர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் கடைசி இரண்டு டி20 கிரிக்கெட்களையும் நடத்துகிறது, அதே நேரத்தில் சட்டோகிராம் மூன்றாவது ஒருநாள் மற்றும் தொடக்க டி20ஐயை நடத்துகிறது.
இந்தியா கடைசியாக 2022-23 சீசனில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
ஆனால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது.