
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்; விரிவான போட்டி அட்டவணை உள்ளே
செய்தி முன்னோட்டம்
2025-26 சீசனில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் ஒயிட் பால் போட்டிகள் தொடரையும் ஒரு டெஸ்ட் போட்டியையும் விளையாட உள்ளன.
இதன்படி, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை எட்டு வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும்.
இந்த சுற்றுப்பயணம் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான ஒரு முக்கியமான தயாரிப்பு கட்டமாக செயல்படும்.
குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முதல்முறையாக ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதேசத்திலும் சர்வதேச போட்டிகளை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
அட்டவணை
ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி போட்டி அட்டவணை
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதல் ஒருநாள் போட்டி - பெர்த், அக்டோபர் 19
இரண்டாவது ஒருநாள் போட்டி - அடிலெய்டு, அக்டோபர் 23
மூன்றாவது ஒருநாள் போட்டி - சிட்னி, அக்டோபர் 25
டி20 கிரிக்கெட் தொடர்
முதல் டி20 - கான்பெர்ரா, அக்டோபர் 29
இரண்டாவது டி20 - மெல்போர்ன், அக்டோபர் 31
மூன்றாவது டி20 - ஹோபார்ட், நவம்பர் 2
நான்காவது டி20 - கோல்ட் கோஸ்ட், நவம்பர் 6
ஐந்தாவது டி20 - பிரிஸ்பேன், நவம்பர் 8
அட்டவணை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அட்டவணை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிப்ரவரி-மார்ச் 2026 இல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் விளையாட உள்ளது.
இதற்கான போட்டி அட்டவணை பின்வருமாறு:-
டி20 கிரிக்கெட் தொடர்
முதல் டி20 - சிட்னி, பிப்ரவரி 15
இரண்டாவது டி20 - கான்பெர்ரா, பிப்ரவரி 19
மூன்றாவது டி20 - அடிலெய்டு, பிப்ரவரி 21
ஒருநாள் கிரிக்கெட் தொடர்
முதல் ஒருநாள் போட்டி - பிரிஸ்பேன், பிப்ரவரி 24
இரண்டாவது ஒருநாள் போட்டி - ஹோபார்ட், பிப்ரவரி 27
மூன்றாவது ஒருநாள் போட்டி - மெல்போர்ன், மார்ச் 1
டெஸ்ட் போட்டி
மார்ச் 6-9 - பெர்த், பகலிரவு