உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியா சாதனை
ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில், இந்தியா பல பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது. 2 தினங்களுக்கு முன்னர் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் வென்றது ஞாபகம் இருக்கக்கூடும். அதே போல ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான கிளப் த்ரோவில் ஏக்தாபியான் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். புள்ளி பட்டியலில், இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி
Medals Tally 🏅 World Para Athletics Championships 2024#TeamIndia #ParaAthletics #Kobe2024 pic.twitter.com/ec9oGb4y7a— Doordarshan Sports (@ddsportschannel) May 23, 2024