வங்கதேசத்திற்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; டெஸ்ட் தொடரில் விளையாடும் ஒருவரைக் கூட சேர்க்காத பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ சனிக்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது.
இந்த அணியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் எவரையும் பிசிசிஐ தேர்வு செய்யவில்லை.
ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த மயங்க் யாதவ் முதன்முறையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடிய வருண் சக்ரவர்த்தி மீண்டும் திரும்புவதையும் அணி பார்க்கிறது.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் துணை கேப்டனாக யாரும் இடம் பெறவில்லை.
இதற்கிடையே, இலங்கைக்கு எதிரான இந்தியாவின் கடைசி டி20 தொடரின் ஒரு பகுதியாக இருந்த பல வீரர்கள் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்திய அணி
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
இலங்கை டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக இருந்த ஆறு வீரர்கள் மட்டுமே இதில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று போட்டிகளும் அக்டோபர் 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முறையே குவாலியர், டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளும் இரவு நேர ஆட்டமாக இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
ட்விட்டர் அஞ்சல்
பிசிசிஐ அறிவிப்பு
NEWS 🚨 - #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
— BCCI (@BCCI) September 28, 2024
More details here - https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5