ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு; கேப்டனாக சல்மா டெட்டே நியமனம்
நவம்பர் 11-20 வரை பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெறும் மகளிர் ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி 2024க்கான இந்திய ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்களன்று (அக்டோபர் 28) அறிவித்தது. நடப்பு சாம்பியனான இந்திய அணிக்கு சலிமா டெட்டே கேப்டனாக செயல்பட உள்ளார். துணை கேப்டனாக நவ்நீத் கவுர் களமிறங்குகிறார். 2016க்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது பட்டத்தை இந்திய அணி வென்றிருந்த நிலையில், இந்த முறையும் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. நவம்பர் 11 அன்று தொடக்க ஆட்டத்தில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி
தொடக்க ஆட்டத்திற்குப் பிறகு, நவம்பர் 12 ஆம் தேதி கொரியாவையும், அதைத் தொடர்ந்து தாய்லாந்து (நவம்பர் 14), சீனா (நவம்பர் 16), ஜப்பான் (நவம்பர் 17) ஆகிய நாடுகளுடன் மோதுகிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய மகளிர் ஹாக்கி வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- கோல்கீப்பர்ஸ் : சவிதா, பிச்சு தேவி கரிபம். டிஃபெண்டெர்ஸ் : உதிதா, ஜோதி, விஷ்ணவி விட்டல் பால்கே, சுசீலா சானு புக்ரம்பம், இஷிகா சவுத்ரி மிட்ஃபில்டர்ஸ் : நேஹா, சலிமா டெட்டே (கேப்டன்), ஷர்மிளா தேவி, மனிஷா சௌஹான், சுனெலிதா டோப்போ, லால்ரெமிசியாமி. ஃபார்வார்ட்ஸ் : நவ்நீத் கவுர் (துணை கேப்டன்), ப்ரீத்தி துபே, சங்கீதா குமாரி, தீபிகா, பியூட்டி டங்டங்.