INDvsBAN: இந்தியாவிற்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம்
ஆசிய கோப்பைத் தொடரில் இன்ரு ஐந்தாவது போட்டியாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, நேபாள அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். நேபாள அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய குஷால் புர்டெல் மற்ரும் ஆசிஃப் ஷேக் ஆகிய இருவரும் நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர். 10 ஓவர்களில் நேபாள அணி 65 ரன்களைக் குவித்திருந்த போது முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. அதன் பின்பு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, ரன்களையும் சீராகக் குவித்துக் கொண்டே வந்தது நேபாளம்.
அரைசதம் கடந்த வீரர்கள்:
இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளித்து, நேபாள அணியின் ஆசிஃப் ஷேக் அரைசதம் கடந்தார். மற்றொரு வீரரான சோம்பால் காமி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டியின் முதல் பாதியில், 48.2 ஓவர்கள் முடிவில் 230 ரன்கள் குவித்திருக்க ஆல்-அவுட்டானது நேபாள கிரிக்கெட் அணி. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமா ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கின்றனர். மேலும், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருக்கின்றனர். இந்திய அணிக்கு 231 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது நேபாளம்.