Loading...
ஃபிஃபா நட்புப் போட்டி: 44வது இடத்தில் உள்ள பனாமா அணியை 1-1 என சமன் செய்து இந்திய கால்பந்து சாதனை
44வது இடத்தில் உள்ள பனாமா அணியை 1-1 என சமன் செய்து இந்திய கால்பந்து சாதனை

ஃபிஃபா நட்புப் போட்டி: 44வது இடத்தில் உள்ள பனாமா அணியை 1-1 என சமன் செய்து இந்திய கால்பந்து சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
07:41 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச ஃபிஃபா நட்புப் போட்டியில், ஃபிஃபா தரவரிசையில் 138வது இடத்தில் உள்ள இந்திய கால்பந்து அணி, 44வது இடத்தில் உள்ள வலுவான பனாமா அணியை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்து அபார சாதனை படைத்துள்ளது. தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமீல் தலைமையிலான இந்திய அணி, தங்களை விட 94 இடங்கள் முன்னணியில் உள்ள உலகக்கோப்பையில் பங்கேற்ற பனாமா அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சமநிலையைப் பெற்றுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

பதிலடி

ரைன் வில்லியம்ஸ் அபார கோல் மற்றும் பனாமாவின் பதிலடி கோல்

போட்டியின் 41வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ் மிஸ்ரா கொடுத்த சிறப்பான பாஸை வாங்கி, பெங்களூரு எஃப்சி அணியின் விங்கர் ரைன் வில்லியம்ஸ் பந்தை கோல் வலையிலாக்கி இந்தியாவிற்கு 1-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய பனாமா அணியின் மாற்று வீரர் ஓமர் வலென்சியா, 68வது நிமிடத்தில் மைதானத்திற்கு வெளியிலிருந்து மிகக் கடுமையான நீண்ட தூர ஷாட் அடித்து கோல் புகுத்தி ஆட்டத்தை சமன் செய்தார்.

தவறிய கோல் வாய்ப்புகள்

கடைசி நிமிடங்களில் தவறிய வாய்ப்புகள் மற்றும் வீரர்களின் சிறப்பான ஆட்டம்

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் இந்திய அணிக்குக் கிடைத்த பொன்னான கோல் வாய்ப்பை வீரர்கள் நழுவவிட்டனர்.

தொடர்ந்து 87-வது நிமிடத்தில் பனாமா அணியின் தோமஸ் ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க முயன்றபோது, இந்தியத் தற்காப்பு ஆட்டக்காரர் பிஜோய் வர்கீஸ் அபாரமாக செயல்பட்டு பந்தைத் தடுத்தார்.

மேலும் இந்திய அணியின் விங்கர் மன்வீர் சிங்கின் கோல் முயற்சியும் கடைசி நிமிடங்களில் தவறினாலும், பலம் வாய்ந்த பனாமா அணியை இந்திய அணி திறம்பட எதிர்கொண்டு ஆட்டத்தைச் சமன் செய்தது.

ADVERTISEMENT

பிரேசிலுடன் மோதல்

அடுத்ததாகக் கொல்கத்தாவில் பலம் வாய்ந்த பிரேசில் அணியுடன் மோதல்

2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் விளையாடிய அனுபவம் கொண்ட பனாமா அணியை இந்திய அணி சமன் செய்துள்ளது சர்வதேச அளவில் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக இந்திய அணி வரும் அக்டோபர் 3 அன்று கொல்கத்தா விவேகானந்த யுவபாரதி க்ரீடாங்கன் சால்ட்லேக் மைதானத்தில், உலகின் முன்னணி கால்பந்து அணியான பிரேசிலை எதிர்கொண்டு விளையாடவுள்ளது.

இந்த வெற்றி இந்திய வீரர்களுக்கு பிரேசில் போட்டியை எதிர்கொள்ள மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தந்துள்ளது.

ADVERTISEMENT