
India Squad for South Africa Series : தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
டிசம்பர் முதல் ஜனவரி வரை தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை வியாழக்கிழமை (நவம்பர் 30) பிசிசிஐ அறிவித்துள்ளது.
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பிடித்துள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி அணியில் சேர்க்கப்படவில்லை.
டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையேற்கும் நிலையில், கேஎல் ராகுல் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், சுற்றுப்பயணத்தில் இந்திய டி20 அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்த உள்ளார்.
India Squad for South Africa T20I and ODI Series
இந்திய அணி வீரர்களின் பட்டியல்
ஒருநாள் கிரிக்கெட் அணி : ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
டி20 அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
India Test Squad for South Africa Series
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த மூத்த பேட்டர்கள் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் தேர்வாளர்களின் ஆதரவை இழந்து, அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில், போட்டி தொடங்கும்போது அவரது உடற்தகுதியை பொறுத்து அணியில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும்.
டெஸ்ட் அணி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது. ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா.
India Cricket Schedule for South Africa Series
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் போட்டி அட்டவணை
டிசம்பர் 10 : முதல் டி20ஐ, கிங்ஸ்மீட், டர்பன்.
டிசம்பர் 12 : 2வது டி20ஐ, செயின்ட் ஜார்ஜ் பார்க், க்கெபர்ஹா.
டிசம்பர் 14 : 3வது டி20ஐ, நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்.
டிசம்பர் 17 : முதல் ஒருநாள் போட்டி, நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியம், ஜோகன்னஸ்பர்க்.
டிசம்பர் 19 : 2வது ஒருநாள் போட்டி, செயின்ட் ஜார்ஜ் பார்க், க்கெபர்ஹா.
டிசம்பர் 21 : 3வது ஒருநாள் போட்டி, போலண்ட் பார்க், பார்ல்.
டிசம்பர் 26-30 : முதல் டெஸ்ட், சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன்.
ஜனவரி 3-7 : 2வது டெஸ்ட், நியூலேண்ட்ஸ், கேப்டவுன்.