வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு பிறகு; சாம்பியன்ஸ் டிராபி வெற்றியுடன் எலைட் கிளப்பில் இணைந்த இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா 12 ஆண்டுகால ஐசிசியின் ஒருநாள் பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
ரோஹித் ஷர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆறு விக்கெட்டுகள் மிச்சமிருக்க 252 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி, மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியின் மூலம், 3 பட்டங்களுடன் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் மற்ற எந்த அணிகளையும் விட அதிக பட்டங்களைக் கொண்ட வெற்றிகரமான அணியாக மாறியுள்ளது.
மேலும், தொடர்ச்சியாக ஐசிசி கோப்பைகளை வென்ற அணிகளின் எலைட் கிளப்பில் இணைந்துள்ளது.
தொடர் பட்டங்கள்
தொடர் பட்டங்களை வென்ற அணிகள்
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2024 டி20 உலகக்கோப்பை வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி, ஐசிசி கோப்பைகளை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்ற மூன்றாவது அணி என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக 1975, 1979 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி மூலம் செய்திருந்தது.
அதன் பின்னர் ஆஸ்திரேலியா 2006 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2007 ஒருநாள் உலகக்கோப்பை மூலம் செய்திருந்தது.
மேலும், 2023இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையை வென்று ஆஸ்திரேலியா மற்றுமொருமுறை இந்த சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில், இந்த எலைட் கிளப்பில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.