
ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஓமானின் சலாலாவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் எப்ஐஎச் ஹாக்கி 5 ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
போட்டியின் முதல் பாதியில் இந்திய ஹாக்கி அணி 2-3 என பின்தங்கினாலும் முடிவில் 4-4 என சமன் செய்தது.
இதையடுத்து, பெனால்டி ஷூட் அவுட்டில் 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் எப்ஐஎச் ஹாக்கி 5 ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.
வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.2 லட்சம் மற்றும் துணை ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முன்னதாக, அரையிறுதியில் மலேசியாவை வென்றதன் மூலம் இந்தியா ஏற்கனவே 2024 எப்ஐஎச் ஹாக்கி 5 உலகக்கோப்பைக்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்தியா
Here are your winners 🏆 🥇
— Hockey India (@TheHockeyIndia) September 2, 2023
Congratulations to the Indian Men's team for defeating arch rivals Pakistan and clinching Gold at the Men's Hockey5s Asia Cup 2023.#HockeyIndia #IndiaKaGame #Hockey5s pic.twitter.com/cs98rJFhJX