India vs England 4ஆவது டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இந்திய அணி
இன்று முடிவடைந்த இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளை வென்றுள்ளது. அதனால், இத்தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. கூடுதலாக, தொடர்ந்து 17ஆவது முறையாக டெஸ்ட் போட்டியை இந்திய மண்ணில் கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளது, இந்திய அணி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, இந்திய அணியுடனான தனது 4வது டெஸ்ட் போட்டியை ராஞ்சி மைதானத்தில் விளையாடியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது.
4வது டெஸ்ட் போட்டி
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 46 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸை தொடங்கியது. எனினும் இந்திய பந்துவீச்சார்களின் அதிரடி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, 53.5 ஓவர்களில் 145 ரன்களை பெற்று ஆட்டமிழந்தது. இந்திய வீரர் அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 192 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஆரம்பத்தில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து ஆட்டத்தை வேகமெடுக்க, மற்ற வீரர்களில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. எனினும், ஷுப்மன் கில், அறிமுக வீரர் துருவ் ஜூரெல் இருவரும், ஆட்டத்தை வெற்றி பாதை நோக்கி திருப்பி, அணியின் வெற்றிக்கு காரணமாயினர்.