
டபிள்யூடிஏ டென்னிஸ் இறுதிப்போட்டியில் வெற்றி; மீண்டும் முதலிடத்தை எட்டிய இகா ஸ்வியாடெக்
செய்தி முன்னோட்டம்
திங்களன்று நடந்த டபிள்யூடிஏ டென்னிஸ் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை தோற்கடித்து, உலகின் நம்பர் ஒன் இடத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
59 நிமிடம் நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் பெகுலாவை எளிதாக தோற்கடித்தார்.
ஸ்விடெக்கின் தொழில் வாழ்க்கையின் 17வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் கடந்த செப்டெம்பரில் அரீனா சபலங்காவிடம் இழந்த நம்பர் 1 இடத்தை மீண்டும் கைப்பற்றினார்.
போட்டிக்கு பிறகு பேசிய இகா ஸ்வியாடெக், "இது நிச்சயம் முன்னேற்றம்தான்.
நாங்கள் தொடர்ந்து அப்படிச் செயல்பட்டால் இன்னும் பல வெற்றிகளை பெறுவோம்." என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
டபிள்யூடிஏ இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் வெற்றி
Simply. Unstoppable.@iga_swiatek is your 2023 @WTAFinals CHAMPION 🎉#WTAFinals #GNPSegurosWTAFinalsCancun pic.twitter.com/lIubf9GhFt
— wta (@WTA) November 6, 2023