அடுத்த செய்திக் கட்டுரை

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இன்று அமெரிக்கா - கனடா மோதல்
எழுதியவர்
Venkatalakshmi V
Jun 02, 2024
09:33 am
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா மோதுகின்றன.
அடுத்ததாக 2-வது ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.
இந்த மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் கிரிக்கெட் போட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா உட்பட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
முதல் போட்டி, இந்தியா நேரப்படி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு, அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெறும்
ட்விட்டர் அஞ்சல்
உலகக் கோப்பை இன்று தொடக்கம்
Under the lights in Dallas 🤩 #USAvCAN #T20WorldCup pic.twitter.com/AJa5yzPhs3
— ICC (@ICC) June 2, 2024