LOADING...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா
இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2023
09:46 pm

செய்தி முன்னோட்டம்

13வது உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. அதன்படி, இத்தொடரின் 14வது லீக் ஆட்டம், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான தொடக்கத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி டாஸை, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், விக்கெட்களை இழந்து, 43.3 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி, 35.2 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் பெற்று ஆட்டத்தை வென்றது. இதன்மூலம், இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலியா அணியில் கிளென் மாக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post