
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையுடன் ஷாருக்கான்; வைரலாகும் புகைப்படம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒருநாள் உலகக்கோப்பை கோப்பையுடன் இருக்கும் படத்தைப் சமூக ஊடங்களில் பகிர்ந்துள்ளது.
புகைப்படத்துடன், "கிங் கான் #CWC23 டிராபி, இது கிட்டத்தட்ட வந்துவிட்டது." என்ற பதிவையும் வெளியிட, கிரிக்கெட் மற்றும் ஷாருக்கான் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு, புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
2011க்கு பிறகு, இந்தமுறை 2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்துகிறது. அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.
இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளதால், லீக் சுற்றில் அக்டோபர் 15ஆம் தேதி இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
உலகக்கோப்பை டிராபியுடன் ஷாருக்கான்
King Khan 🤝 #CWC23 Trophy
— ICC (@ICC) July 19, 2023
It’s nearly here … pic.twitter.com/TK55V3VkfA