Page Loader
ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல்
ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல்

ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 08, 2023
09:12 pm

செய்தி முன்னோட்டம்

ஐசிசி தலைவர் ஜியோப் அல்லார்டிஸ் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக, போட்டியை நடத்தும் பிசிசிஐ அமைப்பின் செயலாளர் ஜெய் ஷா, நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் பிசிசிஐ இன்னும் போட்டி அட்டவணையை தங்களிடம் தரவில்லை என ஐசிஐசிஐ தலைவர் அல்லார்டிஸ் கூறியுள்ளார். இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்தியா போட்டி அட்டவணையை சமர்ப்பித்த பிறகு உறுப்பு நாடுகளிடம் ஒருமுறை ஆலோசித்துவிட்டு, அட்டவணை உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என அல்லார்டிஸ் மேலும் கூறியுள்ளார்.

reason behind delaying schedule release

போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட காரணம்

கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கான போட்டி அட்டவணையை ஒரு ஆண்டுக்கு முன்னரே ஐசிசி வெளியிட்டது. இந்நிலையில், இந்த முறை போட்டி அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட பாகிஸ்தான் தான் முதன்மை காரணம் எனக் கூறப்படுகிறது. இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாட பாகிஸ்தான் செல்ல முடியாது எனக் கூறிவிட்டதால், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியா வர முடியாது என கூறியதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேசியதை அடுத்து, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இந்தியாவில் விளையாட ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுவதால், போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.