ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் : 33 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது இந்திய ஹாக்கி மகளிர் அணி
ஹாக்கி இந்தியா, சனிக்கிழமையன்று (ஏப்ரல் 8) இந்திய மகளிர் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, தேசிய பயிற்சி முகாமுக்கு 33 பேர் கொண்ட குழுவை அறிவித்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் பெங்களூரு மையத்தில் ஏப்ரல் 9 முதல் மே 13 வரை இதற்கான பயிற்சி முகாமை நடத்த உள்ளது. இந்த குழுவில் கேப்டன் சவிதா ராணி மற்றும் நவ்நீத் கவுர், டீன் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர் மற்றும் சலிமா டெட் போன்ற சிறந்த வீராங்கனைகள் உள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் ஒரு பயிற்சியாக ஆஸ்திரேலியாவில் இந்திய மகளிர் ஹாக்கி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
33 பேர் கொண்ட வீராங்கனைகளின் பட்டியல்
கோல்கீப்பர்கள்: சவிதா, ரஜனி எதிமார்பு, பிச்சு தேவி கரிபம் மற்றும் பன்சாரி சோலங்கி. டிஃபெண்டர்கள்: டீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, அக்ஷதா அபாசோ தெகலே, ஜோதி சாத்ரி மற்றும் மஹிமா சவுத்ரி. மிட்பீல்டர்கள்: நிஷா, சலிமா டெடே, சுஷிலா சானு புக்ரம்பம், ஜோதி, நவ்ஜோத் கவுர், மோனிகா, மரியானா குஜூர், சோனிகா, நேஹா, பல்ஜீத் கவுர், ரீனா கோகர், வைஷ்ணவி பால்கே, மற்றும் அஜ்மினா குஜூர். முன்கள வீரர்கள்: லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி, தீபிகா, சங்கீதா குமாரி, மும்தாஜ் கான் மற்றும் சுனேலிதா டோப்போ.