ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்
செய்தி முன்னோட்டம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் 49 வயதில் காலமானார் என்று அவரது மனைவி நாடின் சமூக ஊடக இடுகையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜிம்பாப்வே சர்வதேச செய்தித் தொடர்பாளரான ஜான் ரென்னியும் இது குறித்து பேசி இருக்கிறார்.
"அவர் இன்று அதிகாலை மாடபெலேலேண்டில் உள்ள அவரது பண்ணையில் காலமானார். அவரது குடும்பத்தினர் மற்றும் அனுப்புக்குரியவர்கள் அவருடன் இருக்கின்றனர். புற்றுநோயுடனான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர் நிம்மதியாக உயிரிழந்தார்" என்று ரென்னி தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் மிகப் பிரபலமான வீரர்களில் ஒருவரான ஸ்ட்ரீக், 2018ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புக் குறியீட்டை மீறியதற்காக, 2021ஆம் ஆண்டில் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எட்டு ஆண்டுகள் தடை விதித்தது.
டொய்ஜ்க்வ்
இந்திய பிரீமியர் லீக் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய ஹீத் ஸ்ட்ரீக்
ஜிம்பாப்வேயின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஸ்ட்ரீக், டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தவர் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி முன்னேறிய அவர், ஜிம்பாப்வே, வங்கதேசம் உட்பட பல சர்வதேச அணிகளுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற சில இந்திய பிரீமியர் லீக் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.