
மாடல் மஹியேகா ஷர்மாவுடனான உறவை உறுதிப்படுத்தினார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா
செய்தி முன்னோட்டம்
மாடல் மற்றும் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் விவாகரத்து பெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது மாடல் மற்றும் நடிகையான மஹியேகா ஷர்மாவுடனான தனது புதிய உறவை உறுதிப்படுத்தியுள்ளார். ஹர்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் விடுமுறைக்குச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) இரவு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தகவலை அவர் பொதுவெளியில் வெளியிட்டார். விவாகரத்துக்குப் பிறகு ஹர்திக் தனது உறவு குறித்து வெளிப்படையாக அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். வெளியிடப்பட்டப் புகைப்படங்களில், ஹர்திக் ஒரு பெரிய ஜாக்கெட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து, கடலோரத்தில் அமைதியான தருணத்தை மஹியேகாவின் தோளில் கைவைத்தபடி மகிழ்ச்சியாகக் கழிப்பது தெரிகிறது.
மஹியேகா ஷர்மா
மஹியேகா ஷர்மாவின் பின்னணி
24 வயதான மஹியேகாவின் இன்ஸ்டாகிராம் கணக்கைக் குறியிட்டு ஹர்திக் அந்தப் படத்தைப் பகிர்ந்தது, ரசிகர்கள் நீண்ட காலமாக ஊகித்த ஒரு உறவை உறுதிப்படுத்தியது. மற்றொரு புகைப்படத்தில், அவர் மஹியேகாவின் பெயருடன் ஒரு தீய கண் எமோஜியைச் சேர்த்தது, அவர் இந்த உறவில் மிகவும் தீவிரமாக உள்ளார் என்பதைக் குறிக்கிறது. மஹியேகா ஷர்மா, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான மாடல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர் ஆவார். அவர் எல்லி மற்றும் கிரேசியா போன்ற மதிப்புமிக்கப் பத்திரிகைகளின் அட்டைப் பக்கங்களில் தோன்றியுள்ளார். மேலும், அவர் இந்தியன் ஃபேஷன் விருதுகளில் மாடல் ஆஃப் தி இயர் பட்டத்தையும் வென்றுள்ளார். 2020இல் திருமணம் செய்த ஹர்திக் மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச், ஒரு மகன் இருந்தபோதிலும், 2024இல் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.