NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!!
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!!
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா

    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!!

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 14, 2023
    03:35 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும், டி20 அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தனது மனைவியான நடாசா ஸ்டான்கோவிச்சை மீண்டும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

    இந்த ஜோடி 2020 இல் பதிவுத் திருமணம் செய்த நிலையில், அப்போது இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்த முடியவில்லை.

    இது இருவருக்குமே வருத்தத்தை கொடுத்த நிலையில், தற்போது உதய்பூரில் மிகவும் ஆடம்பரமான திருமண விழாவை நடத்துகின்றனர்.

    இரண்டாவது திருமணத்திற்கான தேதியை காதலர் தினத்தை மையப்படுத்தி தேர்ந்தெடுத்துள்ளனர்.

    திருமணத்திற்கான ஆரம்பகட்ட சடங்குகள் திங்களன்றே (பிப்ரவரி 13) தொடங்கிவிட்ட நிலையில், பிப்ரவரி 16 வரை திருமண விழா நடைபெற உள்ளது.

    ஹர்திக் பாண்டியா

    ஹர்திக் பாண்டியா-நடாசா ஸ்டான்கோவிச் முதல் திருமணம்

    செர்பிய நாட்டைச் சேர்ந்த நடாசா ஸ்டான்கோவிச் 2012 முதல் இந்தியாவில் வசித்து வருவதோடு மாடலாகவும் இருந்து வருகிறார்.

    மேலும் சத்யாகிரகா உள்ளிட்ட சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். எனினும் 2014 பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

    ஹர்திக்கும், நடாசாவும் காதலித்து வந்த நிலையில் 2020 புத்தாண்டில் துபாயில் ஒரு கப்பலில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    மேலும் கொரோனா உச்சத்தில் இருந்த 2020 மே மாதத்தில் இருவரும் மிகவும் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்தனர். அதன் பிறகு அதே ஆண்டின் ஜூலை மாதத்தில் அகஸ்தியா என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    திருமணங்கள்

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    கிரிக்கெட்

    உள்நாட்டில் டெஸ்ட் தொடர்களில் ஜாம்பவானாக இருக்கும் இந்தியா! கடந்த கால புள்ளி விபரங்கள்! டெஸ்ட் கிரிக்கெட்
    ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்! டி20 கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் சூர்யகுமார் யாதவ்! டெஸ்ட் கிரிக்கெட்
    இந்தியா vs ஆஸ்திரேலியா : டெஸ்ட் அறிமுகம் உறுதியானதும் உருகிய கே.எஸ்.பாரத்! வைரலாகும் புகைப்படம்! டெஸ்ட் கிரிக்கெட்

    திருமணங்கள்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025