தினேஷ் கார்த்திக்கின் 38வது பிறந்த நாள் இன்று : மறக்க முடியாத 3 போட்டிகள்!
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக் வியாழக்கிழமை (ஜூன் 1) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தினேஷ் கார்த்திக்கைப் பற்றி பேசுகையில், 2018ஆம் ஆண்டு நிதாஹாஸ் டிராபி இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்த கடைசி பந்தில் ஒரு மாபெரும் சிக்சர் அடித்தது, ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் மனதிலும் இப்போதிலும் நினைவில் இருக்கக்கூடும்.
அவர் இந்திய அணிக்காக நீண்ட வருடங்களுக்கு முன்பே அறிமுகமானாலும், எம்எஸ் தோனியின் வருகையால் இந்திய அணியில் நிரந்தரமாக வாய்ப்பை பெறமுடியாமல் போனாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தனது திறமையை வெளிக்காட்டியே வந்துள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகளில் மொத்தமாக 154 போட்டிகளிலும், 26 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
dinesh karthik special matches to remember
தினேஷ் கார்த்திக்கின் முக்கியமான போட்டிகள்
ஒருநாள் கிரிக்கெட்டில் 30.20 என்ற சராசரியைக் கொண்ட கார்த்திக், சர்வதேச அளவில் மிகவும் அழுத்தமான சூழ்நிலைகளிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவற்றில் சில இங்கே:-
2018இல் வங்கதேசத்தில் நடந்த நிதாஹாஸ் டிராபி இறுதிப் போட்டியான இதில் இறுதி பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் அபாரமாக சிக்சரை அடித்து வெற்றியை பெற்றுத் தந்தார்.
2010இல் சச்சின் டெண்டுல்கர் தனது இரட்டை சதத்தை பதிவு செய்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 85 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.
2007இல் லண்டனில் தினேஷ் கார்த்திக், இங்கிலாந்துக்கு எதிராக 91 ரன்கள் எடுத்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அனில் கும்ப்ளே சதமடித்ததும் இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.