Page Loader
குருவை மிஞ்சிய சிஷ்யன்; செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த குகேஷ் 
செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த குகேஷ்

குருவை மிஞ்சிய சிஷ்யன்; செஸ் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த குகேஷ் 

எழுதியவர் Sekar Chinnappan
Sep 01, 2023
04:48 pm

செய்தி முன்னோட்டம்

36 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என கோலோச்சிக் கொண்டிருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி, டி. குகேஷ் அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார். பிரக்ஞானந்தாவை விட 9 மாதங்கள் மற்றும் 13 நாட்கள் குறைந்த வயதுடைய டி. குகேஷ், 2013இல் பிரக்ஞானந்தா மூலம் உத்வேகம் அடைந்து செஸ் போட்டிக்குள் நுழைந்தார். பின்னர், 2019 ஆம் ஆண்டில், பிரக்ஞானந்தாவின் சாதனையை முறியடித்து நாட்டின் இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார். அப்போதிருந்து, கிடுகிடுவென வளர்ச்சியைக் கண்டா குகேஷ் தற்போது, தனது வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

gukesh becomes number 1 in indian chess players

வீரர்களின் செப்டம்பர் மாத தரவரிசையை வெளியிட்ட FIDE

2023 செப்டம்பர் மாதத்திற்கான வீரர்களின் தரவரிசையை உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) வியாழன் (ஆகஸ்ட் 31) அன்று வெளியிட்டது. இதில், 17 வயதான குகேஷ் விஸ்வநாதன் ஆனந்தை முந்தி உலக தரவரிசை பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விஸ்வநாதன் ஆனந்த் இப்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் இந்திய அளவிலான தரவரிசையில் முதலிடம் பிடித்து, 37 ஆண்டுகால விஸ்வநாதன் ஆனந்தின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளார். 1 ஜூலை 1986 அன்று இந்திய அளவிலான தரவரிசையில் முதலிடம் பிடித்த விஸ்வநாதன் ஆனந்த் அப்போதிருந்து தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்திருந்த நிலையில், இப்போது முதன்முறையாக அதை இழந்துள்ளார். இதற்கிடையே, நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா தரவரிசையில் 19வது இடத்தில் உள்ளார்.