Page Loader
கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் கம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
கபில்தேவ் குறித்து கவுதம் காம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

கபில்தேவ் கடத்தப்பட்டாரா? கவுதம் கம்பிர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2023
05:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர், இந்தியாவுக்காக முதல் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற கேப்டன் கபில்தேவ் போன்ற தோற்றமுள்ள ஒரு நபரை இரண்டு பேர் தாக்கும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். வீடியோவில் கபில்தேவ் போல் தோற்றமளிக்கும் நபர் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில், காம்பிர் வீடியோவைப் பகிர்ந்து கபில்தேவின் நலம் குறித்து கவலை தெரிவித்தார். இந்த வீடியோ குறித்து தற்போது எதையும் உறுதி செய்ய முடியாத நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இது ஒரு விளம்பரம் என்றும் கூறி வருகின்றனர். மேலும், விளம்பர நிறுவனங்கள் கவனம் ஈர்ப்பதற்காக இதுபோன்ற மலிவான விளம்பரத்தில் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

embed

வைரல் வீடியோ

Anyone else received this clip, too? Hope it's not actually @therealkapildev 🤞and that Kapil Paaji is fine! pic.twitter.com/KsIV33Dbmp— Gautam Gambhir (@GautamGambhir) September 25, 2023