Page Loader
ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்; அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 24, 2024
04:31 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று தொடங்க உள்ள ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் இணைந்து சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை மூன்று ஆண்டுகளுக்கு நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி முதல் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னை தி.நகர் அருகே நடைபெற இருந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த ஃபார்முலா - 4 கார் பந்தயம் இறுதியாக ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இலவசம்

அமைச்சர் உதயநிதி பேட்டியின் முழுவிபரம்

போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் ஆன்லைனில் நடந்து வந்த நிலையில், பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா - 4 கார் பந்தயத்தை பொதுமக்கள் அனைவரும் இலவசமாக நேரில் பார்க்கலாம் என அறிவித்துள்ளார். எனினும், போட்டி தொடங்கும் நாளான ஆகஸ்ட் 31 அன்று காலை மட்டுமே இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 அன்று பிற்பகல் முதல் இரவு வரை தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்த அமைச்சர் உதயநிதி, பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்காக 8,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். மேலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் போட்டியை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி