Loading...
ஃபிஃபா உலகக்கோப்பை 2026: 48 அணிகள், விஏஆர் சர்ச்சை முதல் டிக்கெட் விலை வரை! முக்கிய அம்சங்கள்
ஃபிஃபா உலகக்கோப்பை 2026 சர்ச்சைகள்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026: 48 அணிகள், விஏஆர் சர்ச்சை முதல் டிக்கெட் விலை வரை! முக்கிய அம்சங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 19, 2026
04:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்த 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 48 அணிகள் பங்கேற்கும் புதிய வடிவம், தொடக்கத்திற்கு முன்பு பெரும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், கேப் வெர்டே, காங்கோ மற்றும் குராக்கோ போன்ற சிறிய நாடுகள் தங்களது அபார ஆட்டத்தால் புதிய ரசிகர்களை உருவாக்கின. குறிப்பாக, ஸ்பெயினை சமனில் வறுத்தெடுத்த கேப் வெர்டே அணி, நாக்-அவுட் சுற்றில் அர்ஜென்டினாவிற்கு அசுர நடுக்கம் கொடுத்து 3-2 என்ற கணக்கில் போராடித் தோற்றது. இருப்பினும், இறுதியில் அர்ஜென்டினா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னாள் சாம்பியன்களே அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

கோல்டன் பூட்

மெஸ்ஸி மற்றும் எம்பாப்பேயின் கோல்டன் பூட் பந்தயம்

கால்பந்து உலகின் டாப் நட்சத்திரங்களான லியோனல் மெஸ்ஸி, கைலியன் எம்பாப்பே, எர்லிங் ஹாலாண்ட் மற்றும் ஹாரி கேன் ஆகியோர் இந்தத் தொடரில் கோல் மழை பொழிந்தனர்.

இறுதிப் போட்டிக்கு முன்பாக பிரான்சின் எம்பாப்பே 10 கோல்களுடன் உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 22 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி நடப்புத் தொடரில் 8 கோல்களுடன் ஒட்டுமொத்தமாக 21 உலகக்கோப்பை கோல்களைப் பதிவு செய்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி ஏமாற்றமளித்த வேளையில், ஸ்பெயினின் இளம் அற்புதம் லமைன் யமால் காயத்திலிருந்து மீண்டு அசத்தினார்.

விஏஆர் சர்ச்சை

நடுவர் முடிவுகளை மாற்றியமைத்த விஏஆர் சர்ச்சை

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பயன்படுத்தப்பட்ட விஏஆர் (VAR) தொழில்நுட்பம் மற்றும் சென்சார் பொருத்தப்பட்ட பந்துகள் பல பெரும் சர்ச்சைகளை உருவாக்கின.

எகிப்து, ஜெர்மனி மற்றும் குரோஷியா போன்ற நாடுகளின் மிக முக்கியமான கோல்கள் இந்தத் தொழில்நுட்பத்தால் ரத்து செய்யப்பட்டன.

அர்ஜென்டினாவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் எகிப்து பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் நடுவர்களின் முடிவால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கொதித்தார்.

போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் குரோஷியாவின் சமன் செய்யும் கோல் நூலிழப்பில் ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

டிக்கெட் விலை

டிக்கெட் விலை உயர்வால் சர்ச்சை

ஃபிஃபா அமைப்பு அறிமுகப்படுத்திய டைனமிக் விலை நிர்ணய முறை காரணமாக சாதாரண ரசிகர்களால் டிக்கெட்டுகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

குழு சுற்று போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் விலை 140 முதல் 2,735 டாலர்கள் வரையிலும், இறுதிப் போட்டிக்கு அதிகபட்சமாக 8,680 டாலர்கள் வரையிலும் விற்கப்பட்டது.

இது முந்தைய கத்தார் உலகக்கோப்பையை விடப் பல மடங்கு அதிகமாகும்.

மேலும், ஃபிஃபாவின் மறுவிற்பனை சந்தையில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் ஒன்று அதிகபட்சமாக 2.3 மில்லியன் டாலர் வரை கறுப்புச் சந்தையில் விற்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

விளம்பரம்

விளம்பரப் புகலிடமாக மாறிய ஹைட்ரேஷன் பிரேக்குகள்

கோடைகால வெப்பத்திலிருந்து வீரர்களைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு பாதியின் பாதியிலும் ஃபிஃபா அறிமுகப்படுத்திய ஹைட்ரேஷன் பிரேக் (Hydration Breaks) புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

வானிலை நன்றாக இருந்த இடங்களிலும் இந்த இடைவேளை கட்டாயமாக்கப்பட்டதால், ரசிகர்கள் மைதானத்திலேயே கூச்சலிட்டுத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பயிற்சியாளர்கள் இதனைத் தங்களது உத்திகளை வகுக்கும் டைம்-அவுட் போலப் பயன்படுத்தினர் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை பெரிய விளம்பர இடைவேளைகளாக மாற்றிக் கொண்டன.

இந்த வணிகமயமாக்கல் கால்பந்தின் அசல் வேகத்தைக் கெடுத்துவிட்டதாக முன்னாள் நட்சத்திர வீரர் ராய் கீன் போன்ற பல கால்பந்து வல்லுநர்கள் மிகக் கடுமையாகச் சாடினர்.

ஈரான் அரசியல்

உலகக்கோப்பையை உலுக்கிய ஈரான் அரசியல்

மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக ஈரான் அணி இந்தத் தொடரில் பங்கேற்பதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

அமெரிக்காவின் கடுமையான விசா கட்டுப்பாடுகள் மற்றும் பயணக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஈரான் அணி பங்கேற்றது.

குழு சுற்றோடு ஈரான் வெளியேறியதும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் மார்க்வெய்ன் முல்லின் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க வீரர் போலரின் பலோகனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோவை அழைத்துப் பேசியதாகக் கிளம்பிய தகவல், கால்பந்தில் அரசியல் தலையீடு இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ADVERTISEMENT