
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு? கொதிக்கும் ரசிகர்கள்!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் புதன்கிழமை (ஏப்ரல் 12) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் முறைகேடு நடப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆன்லைனில் முன்பதிவு செய்ய பல முறை முயற்சித்த போதிலும், ரசிகர்கள் டிக்கெட்டுகளைப் பெறுவதில் சிரமப்படுகிறார்கள்.
ஆனால் ஆன்லைனில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்பதாகக் கூறி, ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் நேரடியாக சேப்பாக்கம் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க செல்லும் ரசிகர்களுக்கும் ரொக்கமாக மட்டுமே பணம் பெற்று டிக்கெட் கொடுப்பதால், அவர்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
டிக்கெட்டுகள் நியாயமாக விற்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Embed
ரசிகர்கள் குற்றச்சாட்டு
இதுவே சினிமா தியேட்டர்னா எல்லாம் பொங்கி எழுந்து இருப்பீங்க... Gpay, Card இல்ல cash மட்டும் தானாம்... Black ticket வேற... Extra Rate வேற...pic.twitter.com/DeJgYP6bxi— Karthik Ravivarma (@Karthikravivarm) April 10, 2023