Page Loader
ENGvsNED : 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

ENGvsNED : 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2023
09:42 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் புதன்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் மூத்த வீரர் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 84 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் ஆறு பவுண்டரிகள் அடங்கும். மேலும் கிறிஸ் வோக்ஸும் அரைசதம் விளாசிய நிலையில், இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய பாஸ் டி லீடே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

England beats Netherlands by 160 runs

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரம்

340 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே மேக்ஸ் ஓ'டவுட் மற்றும் காலின் ஆக்கர்மேன் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மொயீன் அலி மற்றும் அதில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, 2025இல் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.