ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி
ஹாங்சோவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடந்த போட்டியில், மலேசியாவின் இவான் யுவன் மற்றும் ரேச்சல் அர்னால்ட் ஆகியோரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினர். 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு, தீபிகா பல்லிகல் முதல்முறையாக பங்கேற்கும் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ள நிலையில், இந்த வெற்றி இருவருக்கும் ஊக்கம் கொடுக்கும் ஒன்றாக மாறியுள்ளது. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக ஸ்குவாஷில் கலப்பு இரட்டையர் ஆட்டம் இந்தமுறைதான் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.