Loading...
5 மணி நேர இடைவெளியில் தேசிய சாதனையுடன் வெண்கலம்: இளையோர் ஒலிம்பிக் ரகசியத்தை உடைத்த தினிதி தேசிங்கு
இளையோர் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்ற தினிதி தேசிங்கு.

5 மணி நேர இடைவெளியில் தேசிய சாதனையுடன் வெண்கலம்: இளையோர் ஒலிம்பிக் ரகசியத்தை உடைத்த தினிதி தேசிங்கு

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
09:05 pm

செய்தி முன்னோட்டம்

செனகல் நாட்டின் டக்கார் நகரில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்திய நீச்சல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த 16 வயது இளம் வீராங்கனை தினிதி தேசிங்கு, தனது வெற்றிப் பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இளையோர் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான பெருமையைப் பெற்றுள்ள இவர், இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கலந்துரையாடலில் தனது அனுபவங்களை வெளிப்படையாக விவரித்தார்.

தேசிய சாதனை

குறுகிய நேர இடைவெளி

டக்காரில் நடைபெற்ற 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தகுதிச் சுற்றுக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையே வெறும் ஐந்து மணி நேர இடைவெளி மட்டுமே இருந்ததைச் சுட்டிக்காட்டிய தினிதி, "பொதுவாக இந்தியாவில் தகுதிச் சுற்று காலை 9 மணிக்கும், இறுதிப் போட்டி மாலை 4 அல்லது 5 மணிக்கும் நடைபெறும்".

"இதனால் உடல் மீண்டு வரப் போதிய ஓய்வு கிடைக்கும். ஆனால் டக்காரில் காலை 10:30-க்கு தகுதிச் சுற்று முடிந்து, மதியம் 3 மணிக்கே இறுதிப் போட்டி தொடங்கியது".

"இருப்பினும் மனம் தளராமல் நீந்தியதில், எனது நேரத்தை 56.80 விநாடிகளில் இருந்து 56.27 விநாடிகளாக குறைத்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டி வெண்கலம் வென்றேன்" என்று பெருமிதத்துடன் கூறினார்.

பாசிட்டிவ் எனர்ஜி

இறுதி போட்டியின் படபடப்பு

இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோமா என்ற தயக்கத்துடனேயே களமிறங்கியதாகக் கூறிய இவர், "இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று ஒரு பிரத்யேக லேன் கிடைத்துவிட்டால், அங்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமாகிறது".

"இறுதிப் போட்டியின் போது ஏற்படும் நடுக்கம், தீவிர அழுத்தம் மற்றும் வயிற்றுக்குள் ஏற்படும் பட்டாம்பூச்சி படபடப்பு ஆகியவை நமது உடலுக்குள் கூடுதல் ஆற்றலையும் வேகத்தையும் பாய்ச்சுகின்றன".

"அந்த அழுத்தத்தை நேர்மறையாக மாற்றிப் பயன்படுத்தியதே மாலையில் எனது வேகத்தை அதிகரித்தது" என்று தெரிவித்தார்.

மேலும் ஒரே தொடரில் பலமுறை போட்டியிடுவது முந்தைய தவறுகளைத் திருத்தி திறனை மெருகேற்ற பெரிதும் உதவும் என்றும் இந்த இளம் சாம்பியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT