காமன்வெல்த் விளையாட்டு 2026: தங்கம், வெள்ளிகளுடன் 6 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்த இந்தியா
செய்தி முன்னோட்டம்
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரின் 5-வது நாளில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஒரே இரவில் 6 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். தடகளம், பாரா தடகளம் மற்றும் பளுதூக்குதல் ஆகிய பிரிவுகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளனர். ஆண்களுக்கான உயரம்தாண்டுதல் போட்டியில் இந்திய தேசிய வீரர் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் உயரம்தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேவேளையில், மகளிர்களுக்கான F57 குண்டு எறிதல் பிரிவில் ஷர்மிளா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றித் அசத்தினார். இவருடன் போட்டியிட்ட ஷில்பா ஷைலா வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைளித்தார்.
பதக்க மழை
பளுதூக்குதலில் தொடரும் பதக்க மழை
இந்தியாவின் பதக்க வேட்டையில் பளுதூக்குதல் துறை மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது.
வல்லூரி அஜய் பாபு: ஆண்களுக்கான 79 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 330 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஞானேஸ்வரி யாதவ்: மகளிர்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவில் 199 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
பிந்தயாராணி தேவி: மகளிர்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் 199 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
மற்ற விளையாட்டுகள்
குத்துச்சண்டை மற்றும் நீளம்தாண்டுதலில் முன்னேற்றம்
குத்துச்சண்டையில் இந்தியாவின் சச்சின் சிவக் (60 கிலோ), அங்குஷ் (80 கிலோ) மற்றும் சாக்ஷி சௌத்ரி (51 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவுகளில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிப் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
அதேபோல் ஆண்களுக்கான நீளம்தாண்டுதல் தகுதிச் சுற்றில் எம். ஸ்ரீசங்கர் (8.01 மீ) மற்றும் லோகேஷ் சத்தியநாதன் (7.77 மீ) ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
110 மீட்டர் தடை ஓட்டத்தில் தேஜஸ் சிர்சே இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்த போதிலும், காயம் காரணமாக 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
இருப்பினும், ஒரே நாளில் 6 பதக்கங்களை குவித்து இந்திய அணி காமன்வெல்த் தொடரில் தனது வலுவான முத்திரையைப் பதித்துள்ளது.