ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடக்க போட்டிக்கான நடுவர் பட்டியலை வெளியிட்டது ஐசிசி
அகமதாபாத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டிக்கு குமார் தர்மசேனா மற்றும் நிதின் மேனன் கள நடுவர்களாக செயல்படுவார்கள் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்களன்று (செப்டம்பர் 25) உறுதிப்படுத்தியது. மேலும், இந்த போட்டியின் டிவி நடுவராக பால் வில்சன், நான்காவது நடுவராக ஷாகித் சைகட் மற்றும் மேட்ச் ரெஃப்ரியாக ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் குமார் தர்மசேனா மற்றும் நிதின் மேனனுடன் இணைகின்றனர்.
ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வீரர் மற்றும் நடுவராக குமார் தர்மசேனா சாதனை
2015 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வீரராகவும், நடுவராகவும் தர்மசேனா சாதனை படைத்தார். நிதின் மேனன் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக நடுவராக பங்கேற்க உள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த ஷாஹித் இந்தப் போட்டியில் முதன்முறையாக நடுவராக செயல்பட உள்ளார். முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை மேற்பார்வையிட ஐசிசி 20 பேர் கொண்ட நடுவர் குழுவை அறிவித்திருந்தது. ஐசிசி எலைட் பேனல் ஆஃப் அம்பயர்களின் 12 நடுவர்கள் உட்பட 16 நடுவர்கள் மற்றும் நான்கு மேட்ச் ரெஃப்ரிகள் இதில் அடங்குவர்.