வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தற்காலிக போட்டி அட்டவணை வெளியீடு!
செய்தி முன்னோட்டம்
இந்திய அணி ஜூலை 2023 இல் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி தற்போது விளையாடி வருகிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இந்தியா தொடருக்கான ஒரு தற்காலிக அட்டவணையை பகிர்ந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதில் பார்படாஸ், டிரினிடாட் மற்றும் கயானாவில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் என மொத்தம் ஆறு ஒயிட்-பால் ஆட்டங்களை நடத்தும் என்று கூறியது.
கடைசி இரண்டு டி20 போட்டிகள் புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் நகரில் நடைபெற உள்ளது.
tentative schedule
போட்டி அட்டவணை குறித்த முழு விபரம்
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் ஜூலை 12-16வரை டொமினிகாவிலும், 2வது டெஸ்ட் ஜூலை 20-24 டிரினிடாட்டிலும் நடைபெற உள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 27லும், 2வது போட்டி ஜூலை 29லும் பார்படாஸில் நடைபெற உள்ளது.
3வது போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி டிரினிடாட்டில் நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4ல் டிரினிடாட்டிலும், 2வது டி20 ஆகஸ்ட் 6ல் கயானாவிலும், 3வது டி20 ஆகஸ்ட் 8 அன்று கயானாவிலும் நடைபெற உள்ளது.
4வது டி20 ஆகஸ்ட் 12லும், 5வது டி20 ஆகஸ்ட் 13லும் புளோரிடாவில் நடைபெற உள்ளது. எனினும் இந்த அட்டவணையை பிசிசிஐ உறுதிப்படுத்தவில்லை.