Loading...
வாழ்த்துக்கள் தோனி பாய்: ஐபிஎல் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே ஜாம்பவான் தோனிக்கு ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி பதிவு
ஐபிஎல் ஓய்வை அறிவித்த எம்.எஸ். தோனிக்கு ரோஹித் சர்மா நெகிழ்ச்சி வாழ்த்து.

வாழ்த்துக்கள் தோனி பாய்: ஐபிஎல் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே ஜாம்பவான் தோனிக்கு ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி பதிவு

எழுதியவர் Vasuki
Nov 18, 2026
02:27 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் ஜாம்பவானும், ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவருமான எம்.எஸ். தோனி நேற்று ஐபிஎல் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்த நிலையில், அவரது பரம போட்டியாளராக வலம் வந்த மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் களத்தில் பல ஆண்டுகளாக இருவரும் எதிரெதிர் துருவங்களாக நின்று ஆக்ரோஷமாக மோதியிருந்தாலும், களத்திற்கு வெளியே அவர்களிடையே இருந்த ஆழமான நட்பையும் மரியாதையையும் ரோஹித்தின் இந்தப் பதிவு வெளிப்படுத்தியுள்ளது.

ரோஹித் ஷர்மா உருக்கம்

மைதானத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி

இன்று காலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரோஹித் சர்மா, "நம்பமுடியாத ஐபிஎல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் தோனி பாய்".

"பல ஆண்டுகளாக உங்களுடன் மைதானத்தைப் பகிர்ந்து கொண்டதும், எண்ணற்ற நினைவுகளை உருவாக்கியதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் மீது எப்போதும் அளவற்ற மரியாதை உண்டு!" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் இருவரும் இணைந்து தங்களது அணிகளுக்குத் தலா 5 முறை என மொத்தம் 10 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்து வரலாறு படைத்துள்ளனர்.

சிஎஸ்கே ஆலோசகர்

மும்பை இந்தியன்ஸ் நெகிழ்ச்சி வீடியோ

ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் தோனிக்குச் சிறப்பு மரியாதை செலுத்தியுள்ளது.

டாஸ் போடும்போது இருவரும் சிரித்துப் பேசும் புகைப்படத்தை நீலம் மற்றும் மஞ்சள் இதயங்களுடன் பகிர்ந்த மும்பை அணி, இருவரும் ஒரே காரில் பயணித்துப் பின்னர் வெவ்வேறு பாதையில் பிரிவது போன்ற அனிமேஷன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன்களான தோனி, ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் சந்தித்துக்கொண்ட வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளது.

18 சீசன்கள் கொண்ட தனது ஐபிஎல் ஆட்டத்திற்கு விடைகொடுத்துள்ள 45 வயதான தோனி, ஐபிஎல் 2027 தொடர் முதல் சென்னை அணியின் ஆலோசகராக பொறுப்பேற்க உள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT