ஐசிசி மாதாந்திர சிறந்த வீரராக கிறிஸ் வோக்ஸ் தேர்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்டதாக, ஜூலை 2023க்கான ஐசிசியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்த நிலையில், 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், அவர் ஆஷஸ் 2023 தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக தொடர்நாயகன் விருதையும் வென்றார். ஆஷஸ் 2023 தொடரில் அவர் விளையாடிய மூன்று போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மூன்று போட்டிகளிலும் சேர்த்து பேட்டிங்கில் 79 ரன்கள் எடுத்தார்.
மகளிர் பிரிவில் வரலாறு படைத்த ஆஷ் கார்ட்னர்
ஆடவர் பிரிவில் கிறிஸ் வோக்ஸ் சிறந்த வீரருக்கான விருதை கைப்பற்றிய நிலையில், மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ் கார்ட்னர் ஜூலை 2023க்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றார். இதன் மூலம் ஆடவர் மற்றும் மகளிர் என ஒட்டுமொத்தமாக, ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர்/வீராங்கனை விருதை வென்ற முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை ஆஷ் கார்ட்னர் படைத்துள்ளார். கார்ட்னர் மகளிர் ஆஷஸ் 2023 தொடரில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். மூன்று டி20 போட்டிகளிலும் சேர்த்து 63 ரன்கள் எடுத்ததோடு, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மேலும் ஆஷஸில், ஒருநாள் தொடரிலும் 3 விக்கெட்டுகளை எடுத்ததோடு, 95 ரன்களும் குவித்தார்.