CT 2025: இந்தியாவுக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 241 ரன்களுக்கு முடக்கியது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கிய பாகிஸ்தான் பவர்பிளே முடிவதற்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்ததோடு, ரன் எடுக்கவும் போராடியது.
எனினும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சவுத் சஹீல் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி நிலைத்து நின்று, அணியின் ஸ்கோரை மீட்டது.
இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கும் மேல் கூட்டாக எடுத்த நிலையில், முகமது ரிஸ்வான் 46 ரன்களிலும், சவுத் சஹீல் 62 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
242 ரன்கள்
இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு
அதன் பிறகு வந்தவர்களில் குஸ்தில் ஷா மட்டும் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஹர்ஷித் ராணா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 242 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
முதல் ஓவர்
முதல் ஓவரில் 11 பந்துகளை வீசிய முகமது ஷமி
குறிப்பிட்டபடி, முகமது ஷமி போட்டியின் முதல் ஓவரில் ஐந்து வைடுகளை வீசினார். இதன் மூலம், அவர் இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 11 பந்துகளை வீசியுள்ளார்.
இதன் மூலம் ஒருநாள் கிரக்க்கெட்டில் இந்தியாவிற்காக ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்களான ஜாகீர் கான் மற்றும் இர்ஃபான் பதானின் மோசமான சாதனையை சமன் செய்தார்.
இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இது இரண்டாவது மோசமான சாதனையாக பதிவாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரை, வங்கதேசத்தின் ஹாசிபுல் ஹொசைன் மற்றும் ஜிம்பாப்வேயின் டினாஷே பன்யங்காரா ஆகியோர் தலா 13 பந்து ஓவர்கள் வீசி இதில் முதலிடத்தில் உள்ளனர்.
தகவல்
பாகிஸ்தானுக்கு அதிகப்படியான டாட் பந்துகள்
கிரிக்பஸின் கூற்றுப்படி, சாம்பியன்ஸ் டிராபி 2025 இல் முதல் 20 ஓவர்களில் பாகிஸ்தான் இரண்டாவது அதிகபட்ச டாட்-பால் சதவீதத்தைக் கொண்ட போட்டியாக இது அமைந்துள்ளது.
இந்த விஷயத்தில் 65.8 சதவீதத்தைக் கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளது.
விக்கெட்டுகள்
300 விக்கெட்டுகளை நிறைவு செய்த குல்தீப் யாதவ்
சல்மான் ஆகாவை அவுட் செய்தபோது, குல்தீப் சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 300 விக்கெட்டுகளை நிறைவு செய்தார்.
இதில் 175க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே எடுத்துள்ளார்.
குல்தீப் டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வாய்ப்புகளைப் பெற்றாலும், சிராப்பக செயல்பட்டு 13 போட்டிகளில் இருந்து 56 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
குல்தீப் 40 டி20 போட்டிகளில் இருந்து 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.