இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி 2025: போட்டிகளை நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது?
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இன்று பிப்ரவரி 19, புதன்கிழமை தொடங்க உள்ளது.
மார்ச் 9 வரை நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன.
உலகின் முன்னணி ஒருநாள் அணிகளில் எட்டு அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த போட்டியை எங்கே எப்போது நேரலையில் பார்க்கலாம் மற்றும் போட்டிகளால் பங்கேற்க உள்ள அணிகள் எவை உள்ளிட்ட விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#SportsUpdate | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று தொடக்கம்#SunNews | #ChampionsTrophy2025 | #PAKvNZ pic.twitter.com/y0ADQs9cCp
— Sun News (@sunnewstamil) February 19, 2025
போட்டி
போட்டி வடிவம் மற்றும் நேரலை விவரங்கள்
போட்டியில் பங்கு பெரும் 8 அணிகளும் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அணிகள் தங்கள் குழுப் போட்டிகளில் விளையாடியதும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் 2 அணிகள் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்தப் போட்டி பெரும்பாலும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியா மட்டுமே துபாயில் தனது போட்டிகளை விளையாடுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்.
இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் இந்தியா முழுவதும் பல மொழிகளில் போட்டிகளை ஒளிபரப்பும். அதோடு, ஜியோஹாட்ஸ்டாரில் போட்டிகளை நேரடியாக காணலாம்.