
காயத்தில் இருந்து மீளாததால் ஐபிஎல்லில் இருந்து பும்ரா வெளியேற உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் ஐபிஎல் 2023இல் அவர் மீண்டு வவறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
கிரிக்பஸ் கூற்றுப்படி, ஐந்து மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத பும்ரா, தற்போது ஐபிஎல்லிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என ஐபிஎல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 31 முதல் மே வரை நடைபெறும் ஐபிஎல்லில் அவர் பங்கேற்காத முடியாமல் போவதோடு, ஜூன் மாதம் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் இழக்க நேரிடும் எனத்தெரிகிறது .
இதற்கிடையே, அக்டோபர்-நவம்பரில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு பும்ராவை உடல் தகுதி பெற பிசிசிஐ கவனித்து வருவதாக கிரிக்பஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
கிரிக்பஸ் ட்வீட்
The India pacer is doubtful to play in the #IPL2023 in March-May as well as the WTC final in June, if India make it. @vijaymirror has more
— Cricbuzz (@cricbuzz) February 27, 2023