பிரேசில் பாரா பேட்மிண்டன் ஓபன் 2023 : 24 பதக்கங்களை வாரிக் குவித்த இந்தியா
பிரேசில் பாரா பேட்மிண்டன் சர்வதேச ஓபன் 2023 போட்டியில் இந்திய அணி 24 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றாக நடந்த இந்த போட்டி ஏப்ரல் 10 முதல் 16 வரை நடைபெற்றது. கடைசியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் பிரமோத் பகத் & சுகந்த் கடம் ஜோடி இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது. இதன் மூலம் பிரேசில் பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்தியா மொத்தம் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது.
பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் பட்டியல்
தங்கம்: நித்யா ஸ்ரீ, நிதேஷ் குமார், துளசிமதி, நித்யா ஸ்ரீ & சிவராஜன், பிரமோத் பகத் & சுகந்த் கடம், துளசிமதி & மானசி ஜோஷி வெள்ளி: பிரமோத் பகத், தருண் தில்லான், மானசி ஜோஷி, பிரேம் அலே & அபு ஹுபைடா, மந்தீப் கவுர் & மனிஷா ராமதாஸ், சிராக் பரேதா & ராஜ் குமார், நிதேஷ் குமார் & துளசிமதி வெண்கலம்: மந்தீப் கவுர், பருல் பர்மர், மனோஜ் சர்க்கார், வைஷ்ணவி புனேயானி, பாலக் கோலி, சுகந்த் கடம், மனிஷா ராமதாஸ், பாலக் கோஹ்லி & வைஷ்ணவி புனேயானி, நவீன் சிவகுமார் & திலஷ்வர் ராவ், நிதேஷ் குமார் & தருண் தில்லான், சிவராஜன் & கிருஷ்ணா நகர்