
இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி தேர்வு: ஜெய் ஷா தலைமையில் இன்று இறுதியாகிறது
செய்தி முன்னோட்டம்
இந்திய டி20 உலகக் கோப்பை அணி மற்றும் வரவிருக்கும் ஐசிசி நிகழ்வுக்காக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவிற்கு யார் பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறித்து முடிவெடுக்கும் நோக்கத்துடன் பிசிசிஐ தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று கூடுகிறது.
முன்னதாக நேற்று ஏப்ரல் 29, திங்கட்கிழமை அன்று அஹமதாபாத்தில் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்தன.
எனினும் அது தள்ளிவைக்கப்பட்டு, இன்று கூடுவதாக கூறப்படுகிறது.
எனினும் தேர்வு செய்யப்பட்ட அணி மே 1 ஆம் தேதி தான் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் கிடைக்குமா என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா MI அணிக்கு திரும்பியப்பின்னர் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கவில்லை.
embed
டி20 உலகக் கோப்பை அணி
ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு#T20WorldCup2024 #TeamIndia #rohitsharma #bcci pic.twitter.com/z1AWhWZSXd— BioScope (@BioScopeTN) April 30, 2024